Type Here to Get Search Results !

போராட்டக்காரர்களை நட்டாற்றில் விட்டு பாதியிலேயே ஓட்டம்





ஜல்லிகட்டு மீதான தடையை குறிப்பிட்ட சாதியினர் கடுமையாக எதிர்த்த நிலையில், பிற சமுதாய மக்கள் அதனை சாதி ரீதியிலான விளையாட்டாக கருதாமல் தமிழர்களின் நலன் சார்ந்த விசயமாக கருதி கிளர்ந்தெழுந்தனர்.  தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்கு ஜல்லிகட்டோடு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என முடிவு செய்து தான் தன்னெழுச்சியாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜல்லிகட்டு வெற்றி என்பது தமிழர்களின் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கான ஆரம்ப புள்ளி என்ற அடிப்படையில் தான் மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.  எனவே தமிழகம் முழுவதும் கூடிய கூட்டம் வெறும் ஜல்லிகட்டிற்கான கூட்டம் அல்ல என்பது தான் உண்மை. எனவே கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயல்திட்டம் இருக்கத் தான் செய்யும்.  ஜல்லிகட்டு மட்டும் தான் தேவை, தமிழர்களின் பிற பிரச்சனைகள் பற்றி போராட மாட்டோம் என அறிவித்துவிட்டு, போராட்டம் தொடங்கப்பட்டிருக்குமானால் அந்த போராட்டம் சில நூறு பேருடன் அன்றே முடிந்திருக்கும்.  எனவே கூடன்குளம், டாஸ்மாக், மீத்தேன், நியூட்ரினோ, ஊழல், சாதி, மத வாதம், கெய்ல் குழாய் பதிப்பு, பன்னாட்டு மயம், விவசாயிகள் பிரச்சனை என பல விசயங்களையும் எதிர்த்து தான் மக்கள் கூடினார்கள்.  இதில் ஒவ்வொருவரும் அவரது குரலை உயர்த்தவே முயல்வர். இதனை ஒருங்கிணைத்து, செல்வது தான் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யும். ஆனால் ஹிப் ஹாப் தமிழா ஆதி இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், ஜல்லிகட்டு மட்டும் தான் தனது கோரிக்கை என்கிறார்.  சிலர் தனி தமிழ்நாடு வேண்டும் என கேட்பதாகவும், சிலர் பிரதமரை திட்டுவதாகவும், சிலர் இஸ்லாமியர்கள் உணவு வழங்கக் கூடாது என எதிர்ப்பதாகவும், இவ்வாறு போராட்டம் வேறு திசைக்கு செல்வதால், இந்த போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.  இந்த போராட்டத்தில் முன்னணியில் உள்ள தலைமைப் பண்பு மிக்கவர்களை ஒறுங்கிணைத்து குழுவாக்கி, போராட்டத்தின் கோரிக்கைகளை வரையறுத்து, அதனை நிறைவேற்றச் சொன்னால் அது சரியாக இருக்கும்.  ஆனால் கோரிக்கை முழுமையாக நிறைவேறாத நிலையில், பாதி வழியிலேயே போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பதோடு, மற்றவர்களையும் அச்சுறுத்தும் வகையில் பேசுவது, சிலரின் தூண்டுதல் என்பதோடு, இத்தனை நாள் கடுமையாக போராடியவர்களை அப்படியே விட்டு விட்டுச் செல்வதில் என்ன நியாயம் உள்ளது.  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad